நாமக்கல் மாவட்டத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு; ஆராய்ச்சி நிலையம் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் இன்று (வெள்ளி) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 2 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 1 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (சனி) மழை பெய்ய வாய்ப்பு இல்லை. 

காற்று இன்றும், நாளையும் மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்தும், நாளைமறுநாள் 5 கி.மீ.வேகத்தில் கிழக்கு திசையில் இருந்தும் வீசும்.

வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 68 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலக்கடலையை விதைப்பு செய்யலாம்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது