எஸ்.வாழவந்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


நாமக்கல் தாலுகா கீரம்பூரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 34). தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (27). இந்த தம்பதிக்கு 6 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஜெயராமன் எஸ்.வாழவந்தியில் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் நேற்று ஜெயராமன் எஸ்.வாழவந்தியில் உள்ள ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். 

.பின்னர் ஜெயராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொழிலாளி தற்கொலை செய்தது தொடர்பாக பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்