நாமக்கல் உள்பட 5 சட்டசபை தொகுதிகளில் 1,247 தபால் வாக்குகள் செல்லாதவை; ராசிபுரத்தில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன
தமிழக சட்டசபை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் 4 ஆயிரத்து 872 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன. இவற்றில் 188 வாக்குகள் செல்லாத வாக்குகள் என அதிகாரிகளால்
நிராகரிக்கப்பட்டது.இதேபோல் சேந்தமங்கலம் தொகுதியில் 2 ஆயிரத்து 210 தபால் வாக்குகள் பதிவாகின. இவற்றில் 595 செல்லாத வாக்குகள் நிராகரிக்கப்பட்டது. திருச்செங்கோடு தொகுதியில் 2 ஆயிரத்து 760 தபால் வாக்குகள் பதிவாகின. இதில் 209 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.
பரமத்திவேலூர் தொகுதியில் 3 ஆயிரத்து 944 தபால் வாக்குகள் பதிவாகின. இதில் 168 வாக்குகள் செல்லாத வாக்குகளாக நிராகரிக்கப்பட்டன.
குமாரபாளையம் தொகுதியில் 1,374 வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 87 வாக்குகள் செல்லாத வாக்குகளாக நிராகரிக்கப்பட்டன. மொத்தமாக 5 சட்டசபை தொகுதிகளில் 1,247 வாக்குகள் செல்லாத வாக்குகள் என அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன.ராசிபுரம் தொகுதியில் மொத்தம் பதிவான தபால் வாக்குகள் 3,251 ஆகும். இந்த தொகுதியில் மட்டும் அனைத்து தபால் வாக்குகளும் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Comments
Post a Comment