நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் திறப்பு
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் இ-சஞ்சீவனி செயலி மூலம் கொரோனா தொற்று குறித்த மருத்துவ ஆலோசனை, இருப்பிடத்தின் அருகில் நடைபெறும் காய்ச்சல் முகாம், ஊரடங்கு விதிமுறைகள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.
அதுபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் குறித்த விவரம், சிகிச்சை முறை, அருகில் உள்ள கரோனா கவனிப்பு மையம், படுக்கை வசதிகள், உள்நோயாளிகள் அனுமதி, அவசரகால ஊர்தி வசதி குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தை 04286 281377 8220402437 என்ற செல்போன் எண் மற்றும் 1077 என்ற கட்டணமில்லா எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் அறிந்து கொள்ளலாம்.
24 மணி நேரமும் இம்மையம் செயல்படும், என மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment