முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கிய நடத்துநர்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திருச்செங்கோட்டைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநர் தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்.




தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தாரளமாக நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நடத்துநராக பணிபுரியும் நேசமணி, தனது ஒரு மாத சம்பளமான ரூ.33 ஆயிரத்துக்கு காசோலை எடுத்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் நிதி வழங்க வேண்டும். இதன்மூலம் அரசின் நிதி சுமை குறையும்” என்றார்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்