வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்நிலையத்தில் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கம் மனு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 26/06/2020 அன்று நடைபெற்ற தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டத்தை தொடர்ந்து. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வலியுறுத்தியும், வணிகர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கோரியும் இன்று 30/06/2020 செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களில், ‘காவலர் மனிதாபிமான விழிப்புணர்வு மீட்டெடுப்பு’ மனுவினை, காவல் ஆய்வாளர் அவர்களிடம் வழங்கிட பேரமைப்பின் மாநில தலைவர் திரு.ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று 30/06/2020 செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில், நாமக்கல் நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.செல்வராஜ் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவினை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் திரு.பெரியசாமி, செயலாளர் திரு.ஜெயகுமார் வெள்ளையன், பொருளாளர் திரு.சீனிவாசன் ஆகியோர் அளித்தனர். அவர்களுடன் மாவட்ட ஆலோசகர் திரு.சிவ...