தொடர்ந்து அதிகரிக்கும் முட்டை விலை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் நோய் தொற்று வதந்தி காரணமாக ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை தொடர்ந்து சரிவை கண்டது.



இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதால் முட்டை விலை தற்போது கணிசமாக உயர தொடங்கியுள்ளது. அதாவது மூன்று நாட்களுக்குப் பிறகு முட்டை ஒன்றுக்கு 3 ரூபாய் 55 காசுகளுக்கு முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 தற்போது 15 காசுகள் உயர்ந்து 3 ரூபாய் 70 பைசாவிற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அதாவது மூன்று நாட்களில் 15 காசுகள் உயர்ந்து உள்ளது.

இருப்பினும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கொரோனா நோய் தொற்று காரணமாக ஏற்கனவே கையிருப்பில் உள்ள முட்டைகளை குறைவான விலைக்கு தற்போது விற்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர். கோழிகளுக்குத் தேவையான தீவனம் மற்றும் கோழிப் பண்ணைகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் ஆகியவற்றில் தங்களுக்கு முடிந்தவரை அரசு உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் கோழிப் தீவனம் ஏற்றி வரும் லாரிகள் நீண்ட நேரம் பயணத்தை மேற்கொள்ளுவதால் கோழி தீவனங்கள் சீக்கிரம் கெட்டுவிடும் நிலை ஏற்படுகிறது. இதனால் கோழிப்பண்ணை தீவனத்திற்கு சரக்கு வண்டியில் முன்னுரிமை அளிக்குமாறு அவர் அந்த செய்தி குறிப்பில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Comments