நகராட்சி பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியினைப் பார்வையிட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த அறிவிப்பின்படி  நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 50 சதவீத பேருந்துகள் இயங்கி வருகின்றன.




இந்நிலையில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை பாதுகாக்கும் வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகளில் கிருமிநாசினி கொண்டு பல்வேறு இடங்களில் தெளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்திற்கு சென்ற தூய்மைப் பணியாளர்கள் அங்கு இயக்குவதற்கு தயாராக உள்ள பேருந்துகளில் கைப்பிடி இருக்கை மற்றும் பேருந்துகளில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் பேருந்து புறப்படுவதற்கு முன்பாக கிருமி நாசினிக் கொண்டு தெளித்தனர்.

இதனை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார் மேலும் மக்களுக்கு அரசு வழங்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான சட்டதிட்டங்களை சரியான படி கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்.

Comments