நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் வணிகர்களுக்கு வேண்டுகோள்

ஊரடங்கு தளர்வினை அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சரியான முறைப்படி கடைபிடிக்கும் படி நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் ஜெயக்குமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்




ஊரங்கில் தளர்வு என்பது நமது பொருளாதார முன்னேற்றத்திற்கான என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் இந்த ஊரடங்கின் போது முக கவசம் சமூக இடைவெளி கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கை கழுவுதல் போன்றவை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும் அவர் வணிகர்களுக்கு குறிப்பிட்டு வாடிக்கையாளர்கள் தான் நமது நண்பர்கள் அவர்களின் உடல் நலன் நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவே வாடிக்கையாளர்கள் தங்களது கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும்  வரும்பொழுது அவர்களின் முக கவசம் சமூக இடைவெளி போன்றவற்றை வணிகர்கள் கட்டாயம் கண்காணிக்க வேண்டும்.

 அவ்வாறு கடைபிடிக்காத பட்சத்தில் அவர்களுக்கு பொருட்கள் வழங்குவது தவிர்க்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு இதில் சம்பந்தப்பட்டு நடவடிக்கை எடுக்காத வகையில் நாம் நடந்துகொண்டு வளமான தமிழகத்தை உருவாக்க நாம் பாடுபட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்