திருச்செங்கோட்டில் பாலியல் தொந்தரவு செய்யும் முதலாளியை கைது செய்யக் கோரி மனு
திருச்செங்கோட்டில் விசைத்தறி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் முதலாளியை கைது செய்ய கோரி மனு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்த தோக்கவாடி பகுதியில் செயல்பட்டு வரும் விசைத்தறி தொழிற்கூடத்தில் சில பெண்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவற்றின் உரிமையாளரான செல்வம் என்பவர் அங்கு உள்ள விசைத்தறி கூடத்தில் தங்கி வேலை பார்க்கும் பெண்களுக்கும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு மற்றும் தகாத வார்த்தைகளால் திட்டி தொடர்ந்து தகாத முறையில் நடந்து வருகிறார் என அங்கு பணிபுரியும் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் தொழிற்கூட உரிமையாளரை கைது செய்யக்கோரி தொழிற்கூடத்தில் பணிபுரியும் பெண்கள் இன்று மனு அளித்தனர்.
Comments
Post a Comment