திருச்செங்கோடில் தனியார் பள்ளிக்கு சீல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே புது புளியம்பட்டி பகுதியில் கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு சிறப்பு வகுப்பு எடுத்த தனியார் பள்ளிக்கு திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் மணிராஜ் மற்றும் வட்டாட்சியர் கதிர்வேலு ஆகியோர் சீல் வைத்தனர்.
திருச்செங்கோடு அருகே உள்ள புது புளியம்பட்டி மேத்தா என்ற தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கொரோனோ ஊரடங்கு காலத்தில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கிடைத்த தகவலை அடுத்து திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் மணிராஜ் தலைமையில் வட்டாட்சியர் கதிர்வேலு, வருவாய் ஆய்வாளர் சந்தோஷ், கிராம நிர்வாக அதிகாரி தீபா, ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் பள்ளியின் இரண்டாவது தளத்தில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பயிலும் மாணவ மாணவிகள் 25-க்கும் மேற்பட்டோர் சிறப்பு வகுப்புகள் எடுப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து பள்ளியை பூட்டி சீல் வைக்க வருவாய் கோட்டாட்சியர் மணிராஜ் உத்தரவிட்டார்.
கொரோனோ ஊரடங்கு காலத்தில் அரசு விதிகளுக்கு எதிராக பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்திய பள்ளியின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பள்ளி பூட்டி சீல் வைக்கப்பட்டது.
Nagaraj collector name
ReplyDeleteSry Megaraj
ReplyDelete