பரமத்தி வேலூரில் இருந்து கரூர் இயக்கப்படும் பேருந்துகளின் நேரம் மாற்றம்
நாமக்கல் மாவட்டத்தில் இந்த மாதம் ஜீன் ஒன்றாம் தேதியிலிருந்து அனைத்து வழித்தடங்களிலும் 50 சதவீத பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் தரப்பில் கூறப்பட்டதாவது அதாவது பரமத்தி வேலூரில் இருந்து கரூர் செல்லும் பேருந்துகளின் நேரம் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருவதால் முன்னதாக கடைபிடிக்கப்பட்ட கால அட்டவணை தற்போது சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பரமத்தி வேலூரில் இருந்து கரூர் செல்லும் பேருந்துகள் மாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதால் தீவிர கண்காணிப்புக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் அதாவது வாகனங்களில் கிருமிநாசினி தெளிப்பது போன்ற கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பேருந்துகள் அடுத்த மாவட்டத்தின் எல்லைகுல் அனுமதிக்கப்படுகின்றனர்.
Comments
Post a Comment