மீண்டும் திறக்கப்பட்ட பவானி குமாரபாளையம் பாலம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள பவானி குமாரபாளையம் பாலம் இன்று திறக்கப்பட்டது.




கொரோனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எல்லைகளில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பிற்க்கு பிறகே வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த 60 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பவானி குமாரபாளையம் பாலமானது இன்று திறக்கப்பட்டு மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இருப்பினும்  மக்களை தீவிமாக காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.




கிட்டத்தட்ட 60 நாட்களுக்குப் பிறகு இவ்வழியே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு இருப்பதால் இப்பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பின்னர் சிறிது நேரத்தில் மக்கள் கூட்டம் குறைந்து சீராக மக்கள் பயணித்தனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்