தனிமைப் படுத்தப்பட்டுள்ள லாரி ஓட்டுனர்களை நலம் விசாரித்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட எல்லைகளில் பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் சோலசீராமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளி மாநிலம் சென்று திரும்பிய லாரி ஓட்டுநர்களின் உடல் நிலையை இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

மேலும் அப்பகுதிகள் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக நடைபெறுகிறதா என ஆய்வினை மேற்கொண்டார்.

ஓட்டுநர்களின் தற்போது உடல்நிலையைப் பற்றி சமூக இடைவெளியுடன் நின்று கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணித்தார்.

Comments