சமூக சேவை குழு சார்பில் வனவிலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவளிப்பு

நாமக்கல் மாவட்டம் ராசாம்பாளையம் பகுதியை அடுத்த சர்வ மலைப்பகுதியில் வனவிலங்குகள் மற்றும் உடல் நலத்தில் அக்கறை செலுத்திவரும் சமூக சேவை குழுவான பட்டிக்காட்டு பசுமைப் பட்டறை எனும் சமூக சேவை குழு மூலம் இன்று உணவு அளிகப்பட்டது.




இந்தக் குழுவின் மூலம் இன்று மலை மேல் தொடர்ந்து 64வது வாரமாக மலைமேல் உள்ள பறவை இனங்களுக்கு இன்று அரிசி கம்பு போன்ற தானிய வகைகளை உணவாக பறவைகளுக்கு வைக்கப்பட்டனர்.




இது மட்டும் இல்லாமல் இந்த குழு சார்பில் அப்பகுதியில் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல்  மற்றவர்களின் உதவியை நாடி இருக்கும் முதியோர்களுக்கு அரிசி பருப்பு சமையல் எண்ணெய் போன்ற மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பல குடும்பங்களுக்கு குழு சார்பில் வழங்கி வருகின்றனர்.


மேலும் இப்பகுதியில் குறுங்காடு அமைப்பது விதைப்பந்துகள் தூவுவது மரங்கள் நடுவது போன்ற சமூக சேவை பணிகளிலும் இந்த குழு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Comments