வணிகர் சங்க பேரமைப்பு வேண்டுகோளை பின்பற்றாமல் திறக்கப்பட்ட கடைகள்

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் சாத்தான்குளத்தில் இருவர் விசாரணையின் பொழுது கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு என்ற அறிவிப்பை நேற்று நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்தது.




இதன்படி இன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல வணிகர்கள் இந்த வணிகர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தங்களது நிறுவனங்களை மூடி தனது எதிர்ப்பினை காவல்துறைக்கு காட்டினர்.

இருப்பினும் நாமக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிறைய வணிகர்கள் கடையடைப்புக்கு ஒத்துழைப்பு தராமல் தொடர்ந்து தங்களது வணிகத்தை செய்து கொண்டிருந்தனர். மேலும் வணிகர் சங்கம் சார்பில் நேரில் சென்று வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது சில கடை உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்