நாமக்கல் மாவட்டத்தில் பேருந்து கட்டணத்தை செலுத்த புதிய முறையை அறிமுகப்படுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர்
நாமக்கல் மாவட்டம் மற்றும் தமிழகத்தில் ஏற்கனவே தமிழக அரசு அறிவிப்பின்படி 50 சதவீத பேருந்துகளை இயக்கலாம் என்ற அறிவிப்பின் படி நேற்று முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன இருப்பினும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்பட்டது பல பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மட்டுமே செல்லும் நிலை இருந்தது.
இருப்பினும் மாலை 3 மணிக்கு மேல் கணிசமாக பேருந்துகளில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
முன்னதாக பேருந்தில் பயணிக்கும் மக்கள் அதிகம் தொடும் பகுதிகளான கைப்பிடி மற்றும் படிக்கட்டுகள் போன்றவற்றை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கைகளில் அமர வைத்து அதனை நடத்துனரை கண்காணிக்கும் படி நாமக்கல் மாவட்டத்தில் மெகராஜ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆன்லைன் மூலமாக பேருந்து கட்டணம் செலுத்தும் முறை
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் நேரடியாக பணத்தை வசூலிக்காமல் ஆன்லைன் வாயிலாகவும் பணத்தை செலுத்தும் வசதியை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அதாவது ஆன்லைன் வாயிலாக செலுத்த பயன்படுத்தப்படும் PAYTM எனும் செயலி மூலம் பேருந்து கட்டணத்தை செலுத்தி பயணிகள் பேருந்துகளில் சமூக இடைவெளியுடன் பயணிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள விதிமுறைகளை பேருந்தில் பயணிக்கும் பயணிகள் தவறாக கடைபிடிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கிருமிநாசினி கொண்டு கைகளைக் கழுவுவது போன்றவற்றை நடத்துநர் கண்காணிக்கும் படி அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Comments
Post a Comment