வாழ்வாதார சிக்கலை சந்தித்து வரும் பள்ளிபாளையம் தையல் கலைஞர்கள் மற்றும் கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறிக்கு அடுத்ததாக அதிக மக்களால் பார்க்கப்படும் தையல் தொழிலானது தற்பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது.
வழக்கமான சீசனில் இந்த சமயத்தில் இப்பகுதியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடை அலங்கரிக்க மற்றும் புதிய ஆடைகளை தைக்க நிறைய ஆர்டர்கள் கிடைக்க பெற்று வந்தனர்.
கொரோனா காரணமாக தற்போது பள்ளிபாளையம் பகுதியில் தையல் கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பள்ளிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் பொதுமக்கள் பெரும்பாலும் தங்களுக்குத் தேவையான துணிகளை பள்ளிபாளையம் பகுதிக்கு வந்து தைத்து செல்கின்றனர் இந்நிலையில் இந்த வருடம் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் திருவிழா நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் கார்மெண்ட்ஸ் மற்றும் தையல் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
Comments
Post a Comment