அனைத்து வணிகர் சங்க உறுப்பினர்களுக்கும் பணிவான வேண்டுகோள்


நேற்று 22/06/2020 மாலை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இணைந்து நடத்திய அனைத்து வணிகர் சங்க ஆலோசனை கூட்டத்தில் வணிகர்கள் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு இன்று 23/06/2020 முதல் 30/06/2020 வரை உணவகங்கள் மற்றும் மருந்தகம் தவிர்த்து இதர வணிக நிறுவனங்கள் அனைத்தும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. அதன் அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.




எனவே கொரோனா வைரஸ் பரவும் தீவிரத்தை உணர்ந்து அனைத்து வணிகர்களும் இந்த அறிவிப்பை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கேட்டுக் கொள்கிறது.

வணிகர்களின் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில், இந்த அறிவிப்பை பின்பற்றாத வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே மாவட்டம் முழுக்க உள்ள வணிகர் சங்க நிர்வாகிகள் அவரவர் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களை கண்காணித்து, அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர்களை தொடர்ந்து அறிவுறுத்த வேண்டுகிறோம்.

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த, ஊர் கூடி தேர் இழுக்கும் இந்த உன்னத பணியில் வணிகர்கள் அனைவரும் முழு மனதோடு தங்களை இணைத்துக் கொண்டு, ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்