திருச்செங்கோடு கொரோனா கண்கானிப்பு முகாமில் 43 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன
இதன் ஒரு பகுதியாக வெளி மாநிலங்களில் இருந்து வந்த ஐந்து நபர்கள் கண்டறியப்பட்டு கொரோனா கண்காணிப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக கொரோனா சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிர கண்காணிப்பிற்கு பிறகே மாவட்டத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் சென்னை ஹைதராபாத் மகாராஷ்டிரா போன்ற வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்ததாக இதுவரை மொத்தம் 43 நபர்கள் கண்காணிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment