நாமக்கல் மாவட்ட வணிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு
நாமக்கல் மாவட்ட வணிகர்களுக்கு இன்று நாமக்கல் மாவட்டத்திற்கான தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழகம் முழுவதும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பல்வேறு தளர்வு வருடங்கள் வழங்கப்பட்டு வருவதால் நாமக்கல் மாவட்டத்திற்கு பொருத்தவரை வணிகர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரின் மறு உத்தரவு வரும்வரை ஏற்கனவே அமலில் உள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்கும்படி நாமக்கல் மாவட்டத்திற்கான தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் ஜெயக்குமார் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பிரபல ஜவுளி கடைக்கு மற்றும் பல்வேறு கடைகள் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தினால் விதியை மீறியதாக கூறி சீல் வைக்கப்பட்டது.
எனவே அரசு தெரிவித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கானா சட்டதிட்டங்களை சரியான முறைப்படி கடைபிடிக்குமாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
மேலும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால் அவர்களின் முக கவசம் சமூக இடைவெளி போன்றவற்றை கண்காணித்து வணிகம் செய்யும் படி வணிகர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Comments
Post a Comment