பள்ளிபாளையத்தில் மீண்டும் மந்த நிலைக்கு திரும்பிய விசைத்தறி தொழில்கள்
கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றனர்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகள் மிகவும் குறைந்து உள்ளதால். இப்பகுதியில் பணிபுரியும் பணியாட்களின் வேலை நேரம் முன்பு இருந்ததை போல தற்போது இல்லை என விசைத்தறி தொழிலாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
வழக்கமான நாட்களில் விசைத்தறி பட்டறைகள் வாரத்தில் 6 நாட்களில் 24 மணி நேரமும் 3 ஷிப்ட் என்ற முறையில் இயங்கி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது உள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆடர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது மேலும் ஏற்றுமதி இறக்குமதி செய்வதில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment