நாமக்கல் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்

E பாஸ் இல்லாமல் நாமக்கல் மாவட்டத்திற்குள் நுழைபவர்கள் பற்றி புகார் அளிக்குமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



சென்னை மகாராஷ்டிரா டில்லி போன்ற நகரங்களில் இருந்து  மக்கள் ஈ பாஸ் எனப்படும் முறையான அனுமதி சீட்டு இன்றி மாவட்டத்திற்குள் வேறு வழியாக தவறுதலான முறையில் நுழைந்து வருகின்றனர்.

 இந்நிலையில் இது சட்டப்படி குற்றம் என்பதால் இவ்வாறு அனுமதியின்றி மாவட்டத்திற்குள் நுழையும் மக்கள் பற்றிய விபரங்களை அரசுக்கு தெரிவிக்கும் படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு மெகராஜ் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு ஈ பாஸ் இல்லாமல் தவறுதலான முறையில் நாமக்கல் மாவட்டத்தில் நுழைவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

இவ்வாறு நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி நுழையும் நபர்களின் விபரத்தை 1077 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும்.

Comments