நாமக்கல் மாவட்ட வணிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
நமது பேரமைப்பின் மாநில தலைவர் திரு.விக்கிரமராஜா அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் மண்டல தலைவர் திரு.வைத்தியலிங்கம் அவர்களின் வேண்டுகோள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் பரவும் தீவிரத்தை உணர்ந்தும், நமது வணிகர்களின் பாதுகாப்பு கருதியும், நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று 15/06/2020 முதல் மறு தேதி அறிவிக்கும் வரை ஒத்திவைக்கப்படுகிறது.
இன்று மாவட்ட நிர்வாகத்திடம் வழங்குவதாக திட்டமிடப்பட்டிருந்த 1000 நபர்களுக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு, அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
இந்த வாரம் நடத்த திட்டமிட்டிருந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. கூட்டத்தினை காணொளி மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
அந்தந்த பகுதிகளில் தொடர்ந்து நிவாரண உதவிகளை மேற்கொண்டுவரும் அனைத்து கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொது நிகழ்ச்சிகள் எதையும் நடத்தாமல், அவற்றை ரத்து செய்து, நிவாரண பொருட்களை நேரடியாக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கிட வேண்டுகிறோம்.
இந்த இடைப்பட்ட காலத்தில் வணிகர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவர்கள் எந்த நேரத்திலும் நமது மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு உதவிட நமது மாவட்ட பேரமைப்பு எப்போதும் தயாராகவே உள்ளது.
தயவுசெய்து வணிகர்கள், கொரோனா வைரஸின் தீவிரத்தை உணர்ந்து, நமது மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றி கவனமாக வணிகத்தை தொடர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
எக்காரணம் கொண்டும், முகக்கவசம் அணியாமல் வரும் எந்த ஒரு வாடிக்கையாளரையும் கடைக்குள் அனுமதிக்காதீர். அவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யாதீர். தாங்களும், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுங்கள். கடைகளில் கூட்டம் சேர்க்காமல், சமூக இடைவெளியை அவசியம் கடைபிடியுங்கள்.
அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் நம்மை பாதுகாக்கத்தான் என்பதை கருத்தில் கொண்டு கவனமாக செயல்படுங்கள். இந்த இக்கட்டான நிலையில் நமது சுய ஒழுக்கமும், சுய கட்டுப்பாடும் மட்டுமே முழுவதுமாய் இந்த நோய் தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
நம் வாழ்க்கை, நம் கையில்!
Comments
Post a Comment