வள்ளிபுரம் பகுதியை சேர்ந்த இருவர் ரேஷன் அரிசி கடத்திய குற்றத்திற்காக இன்று கைது
தமிழக அரசின் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தியதற்காக இன்று நாமக்கல் மாவட்டம் வல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக தமிழக அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இலவச அரிசி மக்களிடம் பல்வேறு முறைகளில் சேகரித்து அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதாக நல்லிபாளையம் காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் இன்று வல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் மற்றும் செல்வம் ஆகிய இருவரை இன்று நல்லிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் இந்த அரிசி கடத்தலில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
Comments
Post a Comment