நாமக்கல் மாவட்டத்தில் வெறிச்சோடிய நிலையில் காணப்படும் உணவகங்கள்
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சம் காரணமாக தற்போது மக்கள் யாரும் உணவகங்களை உணவு உட்கொள்வதைத் தவிர்த்து வருகின்றனர்.
தமிழக அரசு ஊரடங்கில் உணவகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுடன் கூடிய தளர்வுகளை அளிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று காரணமாக வீட்டு உணவினை பயன்படுத்தி வருகின்றனர்.
பெரும்பாலும் மக்கள் தங்கள் உணவுத் தேவையை வீட்டு உணவினை பயன்படுத்தி பூர்த்தி செய்து கொள்வதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தங்களது வழக்கமாக விற்பனையாகும் உணவுப் பொட்டலங்களில் விற்பனையும் தற்பொழுது எதிர்பார்த்தபடி விற்பனை இல்லை என கடை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment