எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி
தன்னுடைய காதலை ஏற்க இரு குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் இவர் தனது பக்கத்து தெருவில் புவனேஸ்வரி என்ற பெண்ணை கடந்த 6 வருடமாக காதலித்து வந்தார் இந்நிலையில் இவர்களின் காதல் பற்றிய செய்தி இரு குடும்பத்தாருக்கும் தெரிய வர.
குடும்பத்தார் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணம் செய்து வைக்க மறுத்தனர் இதனால் காதல் ஜோடிகள் நேற்று நாமக்கல் சாலையில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டு எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
பின்னர் காவல்துறையினர் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையின் முடிவில் தனது மனைவியை தன் வீட்டிற்கு பெற்றோரின் ஒப்புதலுடன் அலெக்ஸ் அழைத்துச் சென்றார்.
Comments
Post a Comment