ஜேடர்பாளையம் தடுப்பணைக்கு வந்தடைந்த காவிரி நீர்
மேட்டூர் அணையில் நீர்திறப்பு காரணமாக ஜேடர்பாளையம் தடுப்பணையில் நீர்மட்டம் தற்போது உயர்ந்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் நேற்று மேம்பாலம் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மேம்பால தீர்ப்பிற்கு பிறகு மேட்டூர் அணைக்கு சென்ற முதலமைச்சர் அங்கு குறுவை சாகுபடிக்காக விவசாயிகளுக்கு உதவும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து நீரை மலர்தூவி திறந்துவைத்தார்.
இந்நிலையில் இந்த நீர் தற்பொழுது நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் தடுப்பணைக்கு வந்துள்ளது தொடர் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஜேடர்பாளையம் தடுப்பணையில் நீர்மட்டம் தற்போது உயர்ந்து வருகிறது.
இதனால் ஜேடர்பாளையம் தடுப்பணை நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சிறந்த சுற்றுலாத் தலம் என்பதால் இப்பகுதிக்கு மக்கள் கூட்டம் அதிகம் வரும் வழக்கம் தற்போது அணைக்கு நீர் வரத்து அதிகம் உள்ளதால் இப்பகுதியில் குளிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment