திருச்செங்கோடு 40 கால் மண்டபம் முன்பு புதிய கழிவு நீர் பாதை அமைக்கும் பணி தீவிரம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள 40 கால் மண்டபம் அருகில் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் சிக்கல் காரணமாக பல்வேறு நாட்களாக கழிவுநீர் தேங்கி தேங்கி சென்றதால் தற்போது அதை சீர் படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.




இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக திருச்செங்கோடு பெரிய தேர்நிலை 40 கால் மண்டபம் முன்பு உள்ள இடத்தை சீர் செய்து புதிய கழிவுநீர் பாதை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது 


மேலும் புதிய கான்கிரீட் புனரமைப்பு செய்திட கடந்த 2 நாட்களாக துரிதமாக வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மழைப்பொழிவு அதிகரித்ததால் வேலை நடைபெறுவதில் சற்று நேரம் தொய்வு ஏற்பட்டது இருப்பினும் மழையின் பொழிவு தற்போது திருச்செங்கோட்டில் அதிகரித்து வருகிறது.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

அரசு மருத்துவமனைக்கு 7 டன் ஆக்சிஜன் நாமக்கல் MLA ராமலிங்கம் ஏற்பாடு