இரண்டாவது முறையாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஒரிசா அனுப்பி வைக்கப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள்

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது முறையாக வெளி மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் இன்று தனியார் பேருந்து மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்





இதே போன்று கடந்த மாதம் 20 நபர்கள் கொண்ட வெளிமாநில தொழிலாளர்கள் அரசு ஒப்புதலுடன் தனியார் பேருந்து மூலம் மணியனூர் கிராமத்திலிருந்து சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று அதே போல் இரண்டாம் கட்டமாக நாமக்கல் மாவட்டம் மணியனூர் விஎஸ்டி மில்லில்  பணிபுரிந்த வட மாநிலங்களான ஒரிசாவை 15 நபர்களுக்கும் மேற்பட்ட ஒரிசா-வை சேர்ந்த கூலித் தொழிலாளர்களை மாவட்ட நிர்வாக ஒப்புதலுடன் இன்று தனியார் பேருந்து மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.




மேலும் இவர்களின் பயணத்தின்போது இவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசம் கிருமிநாசினி போன்றவை கொடுத்து இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

Comments