நாமக்கல் மாவட்டத்தில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று

நாமக்கல் மாவட்டம் குப்புச்சிபாளையம் பகுதியில் இன்று பெண் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது





அதாவது நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோணா நோய்த் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 93 ஆக உயர்ந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க இன்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பரமத்தி வேலூர் பகுதியை அடுத்த குப்புச்சிபாளையம் கிராமத்தில் பெண் ஒருவர் இன்று இருதயநோய் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார் அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்து பார்க்க வேண்டுமென்று மருத்துவர் கூறியதை அடுத்து கரூர் மருத்துவ கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா டெஸ்ட் எடுத்து பார்த்தனர் இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து  அந்த பெண்ணை கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது  மேலும்  அவர் குடும்பத்தில் உள்ள நான்கு பேரையும் வீட்டில் தனிமைப்படுத்தி  பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது.

மேலும் பரமத்தி வேலூர் பேரூராட்சி  நிர்வாகத்தினரால் அப்பெண் வசித்த வீட்டைச்சுற்றி சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது ஆக்டிவ் கேஸ் 9 ஆக உயர்ந்துள்ளது இவர்கள் அனைவரும் தற்போது கரூர் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்