தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மறுப்பு அறிக்கை
மறுப்பு அறிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் வணிகர்கள் தங்களது வணிக நிறுவனங்களை மாலை 6 மணிக்கு மூட வேண்டும் என்கிற அறிவிப்பு எதையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வெளியிடவில்லை! இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தோடு எந்த ஒரு ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைகளின் வேலை நேரத்தை குறைத்துக் கொள்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டால், அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளோடு கலந்துபேசி முடிவெடுக்கப்படும்.
வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வணிக நிறுவனங்கள் செயல்பட அரசு வழங்கியுள்ள சலுகைகளை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்புடன் வணிகத்தை தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ஜெயகுமார் வெள்ளையன்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நாமக்கல் மாவட்டம்
Comments
Post a Comment