நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 11.06.2020 இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.




தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து 50 சதவீத அரசு பேருந்துகள் இயங்கலாம் என அரசு அறிவித்தது.




இந்தநிலையில் இந்த மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து 50 சதவீத அரசு பேருந்துகள் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டு வந்தனர். 




இந்நிலையில் பேருந்து இயக்கப்பட்ட முதல் இரண்டு நாட்களில் பேருந்துகளில் பயணிகளின் வரத்து மிகவும் குறைவாக இருந்ததால் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் குறைந்தபட்ச பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

 இருப்பினும் சில பேருந்துகளில் பயணிகள் ஒருவர் கூட இல்லாமல் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மட்டுமே பயணித்தனர்.



இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களில் பயணிகளின் வருகை  தொடர்ந்து அதிகரித்ததால் இன்று முதல் நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இயக்க ஆரம்பித்துள்ளனர் அதன்படி இன்று காலை முதல் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்ச அளவு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்