மாலை 3 மணிக்குப் பிறகு நாமக்கல் பேருந்து நிலையத்தில் கணிசமாக அதிகரிக்க தொடங்கிய மக்கள் கூட்டம்
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று காலை முதல் 50 சதவீதம் பேருந்துகள் இயங்கி வந்தனர்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை முதலே பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிய நிலை காணப்பட்டது.
மேலும் சில பேருந்துகளில் ஒற்றை இலக்கத்தில் பயணிகள் பயணித்தனர் இன்னும் சில பேருந்துகளில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மட்டுமே பயணம் செய்தனர்.
கொரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாகவும் மற்றும் பேருந்துகளில் நேரம் பற்றி சரிவர தெரியாததால் மக்கள் காலை முதல் பேருந்துகளை பயன்படுத்தாமல் இருந்தனர்.
இந்த நிலையில் மாலை 3 மணிக்கு மேல் நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் கணிசமாக அதிகரிக்க தொடங்கியது.
Comments
Post a Comment