முடி திருத்தம் செய்ய ஆதார் எண் கட்டாயமா!
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு முடிதிருத்தம் நிலையங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு ஊரடங்கு தளர்வு முடி திருத்தும் நிலையம் மற்றும் ஸ்பா போன்றவற்றைத் நடத்த அனுமதி அளித்தது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முடி திருத்தும் நிலையங்களும் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடி வருகிறது.
இதனால் வழக்கமான வாடிக்கையாளர்களை விட கூட்டம் அதிகரிப்பதால் அரசு விதிமுறையின்படி வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை கேட்டு பதிவு செய்த பிறகு வாடிக்கையாளர்கள் கடையின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் மக்கள் சிலர் முடி திருத்தம் செய்ய ஆதார் எண் கட்டாயமா? என்ற சிறிய திகைப்புடன் கடையிலிருந்து சென்றனர்.
Comments
Post a Comment