வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்நிலையத்தில் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கம் மனு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 26/06/2020 அன்று நடைபெற்ற தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டத்தை தொடர்ந்து.


இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வலியுறுத்தியும், வணிகர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கோரியும் இன்று 30/06/2020 செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களில், ‘காவலர் மனிதாபிமான விழிப்புணர்வு மீட்டெடுப்பு’ மனுவினை, காவல் ஆய்வாளர் அவர்களிடம் வழங்கிட பேரமைப்பின் மாநில தலைவர் திரு.ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று 30/06/2020 செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில், நாமக்கல் நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.செல்வராஜ் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

மனுவினை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் திரு.பெரியசாமி, செயலாளர் திரு.ஜெயகுமார் வெள்ளையன், பொருளாளர் திரு.சீனிவாசன் ஆகியோர் அளித்தனர்.



அவர்களுடன் மாவட்ட ஆலோசகர் திரு.சிவஞானம், மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு.பிரவீன்குமார், மாநில துணை தலைவர் திரு.சங்கர், மாநில இணை செயலாளர் திரு.பத்ரி நாராயணன், மாவட்ட துணை தலைவர்கள் திரு.முத்துசாமி, திரு.வாசு சீனிவாசன், இணை செயலாளர் திரு.தியாகராஜன் மற்றும் சேந்தை திரு.கோபாலகிருஷ்ணன், திரு.ஜெகதீசன், திரு.உமாமகேஸ்வரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இராசிபுரம் நகர காவல் ஆய்வாளரிடம் இராசிபுரம் அனைத்து வணிகர் சங்கம் சார்பில், பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட துணை தலைவர் திரு.பாலாஜி அவர்கள் சங்க நிர்வாகிகளுடன் சென்று மனு அளித்தார்!



வெண்ணந்தூர் வட்டார அனைத்து வணிகர் சங்கம் சார்பில் வெண்ணந்தூர் காவல்நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது! இதில் சங்கத்தலைவர் திரு. PRK. சுப்பரமணியம், செயலாளர் திரு. M.S.ரமேஷ், பொருளாளர் திரு.A.S. துரைசாமி, மாவட்ட செயர்குழு உறுப்பினர் திரு. S.மேகன், திரு. A.செங்குட்டுவன் மற்றும் திரு.N.அசோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


நாமகிரிபேட்டை வணிகர் சங்கம் சார்பில் சங்க தலைவர் திரு.N.P கிருஷ்ணண், செயலாளர் நெல்லை திரு.சேகர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து நாமகிரிபேட்டை காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்