நாமக்கல் பேருந்து நிலையத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் பயணிகள் கூட்டம்

தமிழக அரசு அறிவிப்பின்படி நாமக்கல் மற்றும் தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல்50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.




இந்நிலையில் பேருந்து இயக்கப்பட்ட முதல் இரண்டு நாட்களில் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது ஏனென்றால் கொரோனோ பரவும் அபாயம் போன்ற இடர்பாடுகளினால் பல மக்கள் அரசு பேருந்துகளை புறக்கணித்து பெரும்பாலும் டூவீலர்களில் பயணிக்கத் தொடங்கிய நிலையில் பேருந்து சேவை தொடங்கிய மூன்றாம் நாளான இன்று நாமக்கல் பேருந்து நிலையத்தில் மக்களின் கூட்டம் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியது.




முகக் கவசம் மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுவது போன்ற முக்கிய கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினாலும் மக்கள் அதிகம் கூடும் பொழுது நோய் பரவும் அபாயம் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது.




இருப்பினும் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே தற்போது வரை இயக்கப்பட்டு வருவதால் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் சமூக இடைவெளி என்பது அந்த சமயத்தில் கேள்விக்குறியாகியுள்ளது.

Comments