வெறிச்சோடிய கொல்லிமலை சுற்றுலா தலங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை பகுதி மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும் இந்நிலையில் இந்த வருடம் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக மக்களின் வருகை இப்பகுதியில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
அதாவது கடந்த வருடத்தில் இந்த கொல்லிமலையில் இந்த சீசனின் போது மக்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படும்.
இதன் காரணமாக மலைமேல் உள்ள மலைவாழ் மக்கள் தங்களின் விலை பொருட்களான மிளகு வெற்றிலை பாக்கு பலபழம் மற்றும் பல தானிய வகைகளை பயிரிட்டு இந்த சீசன் சமயம் பார்த்து விற்று அதில் லாபம் ஈட்டி வந்தனர்.
இந்நிலையில் இந்த வருடம் கொரோனா வைரஸ் நோய் பரவும் அச்சம் காரணமாக மக்களின் வருகை மிக குறைவாகவே காணப்படுகிறது. மேலும் கொல்லிமலையின் பல்வேறு பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளூர் மக்களே தீவிர கண்காணிப்பு பிறகு மலைமேல் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் தற்போது நிலவிவரும் மந்தநிலை காரணமாக விளைவித்த பொருட்களை விவசாயிகள் சந்தைப்படுத்துவதில் சிரமம் அடைந்துள்ளனர் மேலும் இவர்கள் விளைவித்த பொருட்கள் வீணாகும் நிலையில் தற்போது உள்ளது.
Comments
Post a Comment