நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகள் வாபஸ்
பரவிவரும் கொரோனவைரஸ் தீவிரத்தை குறைக்கும் விதமாக நாமக்கல் மாவட்டத்தின் அண்டை மாவட்டங்களான கரூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வில் பல்வேறு கட்டுப்பாடுகளை தற்போது மீண்டும் விதித்துள்ளது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனடிப்படையில் நேற்று நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு கடைகள் திறப்பது மற்றும் வணிக வளாகங்களில் நடத்தும் நேரத்தை குறைப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு மெகராஜ் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது இருப்பினும் நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு மற்றும் நிறுவனங்களின் வேலை நேரத்தை குறைப்பது போன்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு 9 மணியளவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment