பஞ்சாயத்து தலைவர்கள் வருடந்தோறும் எழுதவேண்டிய பரீட்சை...!
ஆம் ஒவ்வொரு ஊராட்சியின் பஞ்சாயத்து தலைவர்களும் வருடத்திற்கு ஒரு முறை “ நிர்வாக அறிக்கை ” என்கிற பெயரில் எழுத வேண்டும். அந்த நிர்வாக அறிக்கையை அவர் ஒழுங்காக எழுதியிருக்கிறாரா என மக்கள் கிராம சபையில் அதனை திருத்தி ஒப்புதல் அளிக்க வேண்டும்!
இதனை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 98 (1), 242 – ம் மற்றும் அந்த நிர்வாக அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை அரசாணை எண் 248 நாள்: 3-12-1999 கூறப்பட்டுள்ளது.
இதில் அன்றைய நிதியாண்டில் கிராம ஊராட்சியின் கீழ்கண்ட முக்கிய இனங்கள் தொடர்பாக விரிவாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
1. கிராம சபை மற்றும் கிராம ஊராட்சி மன்றங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விரிவான விளக்கத்தையும், அந்த தீர்மானங்களின் மீது இதுநாள் வரை அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன என்றும், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனில் அது ஏன் என்றும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
2. நிலைக்குழுக்கள் ஏதேனும் அமைக்கப்பட்டுள்ளதா? அமைக்கப்பட்டிருப்பின் அவை எந்தெந்த காரணங்களுக்காக அமைக்கப்பட்டன? அவற்றின் கூட்டகள் முறையாக கூட்டப்பட்டதா?
3. கிராம ஊராட்சிகளில் பராமரிக்கப்பட வேண்டிய நோட்டுகள் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?
4. ஊராட்சியில் பணிபுரியும் அலுவலர்களின் சம்பளம் எவ்வளவு அதற்காக வருடம் எவ்வளவு செலவாகிறது?
5. ஊராட்சிகளில் ஆக்கிரமிப்பு ஏதேனும் இருக்கிறதா? இருந்தால் அவற்றை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
6. புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள், மற்றும் இன்னும் சில சாலை சார்ந்த கேள்விகள்.
7. எத்தனை தெருவிளக்குகள் வாங்கப்பட்டன? அவற்றின் வகைகள் என்னென்ன? இதுபோன்ற தெருவிளக்குகள் சார்ந்த கேள்விகள்
8. முக்கியமாக அந்த ஊராட்சியின் அந்த வருடத்திற்கான மொத்த வரவு செலவு விவரங்கள்.
9. கல்வி, பொது கழிவறைகள், குடிநீர், ஊராட்சிகளின் வரவினங்கள் மற்றும் தணிக்கை குறித்த தகவல் என 10 இன்ங்களில் மொத்தம் 123 கேள்விகளுக்கான பதில்களுடன் ஒட்டுமொத்த ஊராட்சியின் மொத்த தகவல்களையும் இந்த அறிக்கையில் ஊராட்சி தலைவர் கொடுக்க வேண்டும்.
Comments
Post a Comment