வீசப்பட்ட விதைப்பந்துகளால் விளைந்த நன்மை

நாமக்கல் மாவட்டம் ராசாம்பாளையம் பகுதி அடுத்த சர்வ மலைப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீயினால் பெருமளவு காட்டு மரங்கள் அதில் எரிந்து கருகி நாசம் ஆகினர்.



இந்நிலையில் அப்பகுதியில் களப்பணி மேற்கொண்ட மேற்கொண்டு புதிய மரங்களை நடுதல் மற்றும் நடப்பட்ட மரங்கள் பராமரித்தல் போன்ற சமூக சேவை பணிகளில் ஈடுபட்டுவரும் பட்டிக்காட்டு பசுமை பட்டறை எனும் சமூக சேவை குழுவின் மொத்த உழைப்பும் ஒரு சிலரின் அஜாக்கிரதையால் அன்று காட்டு தீக்கிரையாகி நெருப்பில் கருகின.




இருப்பினும்கடின உழைப்பிற்கு என்றுமே சரியான பலன் உள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக காட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரபட்டு அடுத்த சில வாரங்களில்  அப்பகுதியில் அக்குழுவின் சார்பில் விதைப்பந்துகள் காட்டுத்தீ ஏற்பட்ட இடங்களில் முழுவதுமாக வீசப்பட்டது.


இந்த நிலையில் இவர்களின் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இந்நிலையில் இப்பகுதியில் தூவப்பட்ட விதைப்பந்துகள் தற்பொழுது துளிர்விட்டு வளர ஆரம்பித்துள்ளது.


இந்நிலையில் இப்பகுதி மீண்டும் சோலை போன்ற அழகான காடு உருவாவதில் எந்த சந்தேகமும் இல்லை.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்களே Bio Diesel பற்றிய ஒரு எளிய புரிதல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

நேற்று திருச்செங்கோடு பகுதியில் பெய்த கன மழையில் அடித்துச் செல்லப்பட்ட முருகேசன் என்பவர் இன்று சடலமாக மீட்பு