பேருந்துகளில் பயணிக்கும் மக்களின் சமூக இடைவெளியை கண்காணித்த மாவட்ட ஆட்சியர்
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் 50 சதவீத பேருந்துகள் இயங்க தொடங்கியது.
இருப்பினும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் பொழுது முகக்கவசம் கிருமி நாசினி மற்றும் சமூக இடைவெளி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேருந்து இயங்க வேண்டும் இதனை நடத்துனர் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
அதன்படி இன்று காலை நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்திற்கு வருகை புரிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு மெகராஜ் அவர்கள் பேருந்தில் பயணிக்கும் மக்களின் சமூக இடைவெளி முக கவசம் போன்ற கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்.
அதன் பிறகு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்த மக்களுக்கு முககவசம் சமூக இடைவெளி மற்றும் பேருந்தில் ஏறுவதற்கு முன்பாக கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் கடைப்பிடிக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தினார்.
Comments
Post a Comment