திருச்செங்கோடு பகுதியில் துணை மின் நிலையத்தை திறந்து வைத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாமக்கல் மாவட்டத்திற்கான துணை மின் நிலையத்தை இன்று திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் ஏமபள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 110/ 22 கிவோ திறனுடைய தமிழ்நாடு எரிசக்தி துறைக்கு சார்ந்த துணை மின் நிலையத்தை காணொளி காட்சி மூலம் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார்.

 இந்த நிகழ்ச்சியில்  மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அமைச்சர் சரோஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

 மேலும் நாமக்கல் மாவட்ட தற்போதைய கொரோனவைரஸ் நிலையை பற்றி அமைச்சர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

Comments