இணைப்பு சாலை சீரமைக்கும் பணியை பார்வையிட நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
சோழசிராமணி தடுப்பணையில் நடைபெற்றுவரும் இணைப்பு சாலை பணியை இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு மெகராஜ் அவர்கள் இன்று சோலசிராமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள வெளி மாநிலம் சென்று திரும்பிய லாரி ஓட்டுநர்களின் உடல் நலத்தை விசாரித்த பிறகு தடுப்பணை பகுதியில் தற்போது நடைபெற்று வரும் இணைப்புச் சாலை சீரமைப்பு பணியை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் அப்பகுதியில் விரைவாக நடைபெற்று வரும் பணியினை பற்றி கேட்டறிந்தார் அப்பகுதியில் பணிபுரிந்த வேலை ஆட்களின் உடல் நலம் மற்றும் சமூக இடைவெளி முகக் கவசம் போன்றவற்றை கண்காணித்தார்.
Comments
Post a Comment