நாமக்கல் மாவட்டத்திற்க்கு கொரோனா சிறப்பு அதிகாரி நியமனம்
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனவைரஸ் அதிகம் பரவி வரும் காரணத்தினால் தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களுக்கும் கொரானோ சிறப்பு அதிகாரிகளை நியமித்து கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை தற்போது தமிழக அரசு நியமித்து வருகின்றது.
இந்நிலையில் ஏற்கனவே நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால்.
தமிழகம் கொரோனா வைரஸ் பாதிப்பில் அடுத்த கட்டத்தை சென்றுவிடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன இதன் முதற்கட்டமாக தமிழக அரசு 33 மாவட்டத்திற்கும் தனி சிறப்பு IAS அரசு அதிகாரிகளை நியமித்து உள்ளது இதன்படி நாமக்கல் மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக தயானந்தாகட்டாரியா நேற்று மாலை நியமிக்கப்பட்டார்.
இவர் முன்னதாக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார் தற்போது நாமக்கல் மாவட்ட சிறப்பு அதிகாரியாக பதவி ஏற்றுள்ளார்.
Comments
Post a Comment