பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தயாராகும் சிறப்பு 308 தேர்வு மையங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் சிறப்பு புதிய தேர்வு மையங்கள் தயாராகி வருகிறது.
இதுபற்றி இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.மெகாராஜ் அவர்கள் செய்திக்குறிப்பில் கூறியதாவது நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு எழுத உள்ள 21305 மாணவ மாணவிகளுக்கு உகந்த 308 சிறப்பு தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளது.
மாணவர்கள் தேர்வு எழுதுவதற்க்கு முன்பாக முகக் கவசங்கள் கிருமிநாசினி கொண்டு கை கழுவுவது சமூக இடைவெளி போன்றவை கண்காணிக்கப்படும் மேலும் மாணவர்களுக்கு 3 முகக் கவசங்கள் வழங்கப்படுவதும் மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து வர பேருந்துகள் போன்ற வசதிகளை ஏற்பாடு செய்வது போன்றவைகள் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று ஆலோசனை கூட்டத்தில் விவாதித்தார்.
Comments
Post a Comment