நாமக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறும் வணிகர்களுக்கு வணிகர் சங்க துணை நிற்காது
கொரோனா நோய் தொற்று பரவும் அச்சம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வேண்டுகோளின்படி வணிக வளாகங்கள் மற்றும் கடைகளை காலை 10 மணிக்கு திறந்து மாலை 5 மணிக்கு மூடும்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.மெகராஜ் அவர்கள் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிறிது நாட்களுக்கு மட்டுமே அனைத்து வணிகர்களும் இந்த உத்தரவைப் பின்பற்றி வந்தனர். இருப்பினும் சிலர் இன்று வரை இந்த உத்தரவை மதித்து ஊரடங்கினை முறையாக கடைபிடித்து கடைகளை மூடி வருகின்றது.
இந்நிலையில் சில கடைகள் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறும் வகையில் தங்களது கடைகளை மாலை 5 மணிக்கு மேலும் திறந்து வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர் இதனால் அப்பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடைகளுக்கு வருகை புரியும் வாடிக்கையாளர்களுக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் திரு ஜெயக்குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் கடைகளைத் திறந்து வைத்து வியாபாரம் செய்யும் கடைகள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சங்கம் துணை நிற்காது என அவர் தெரிவித்தார்.
Intha time limit innum irukka or 30th june oda overa pls sollunga
ReplyDeleteNo it was continue for our safety and goods
Delete