கொத்தடிமைகளாக இருந்த வடமாநில தொழிலாளர்களை மீட்ட அரசு அதிகாரிகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட 12 வடமாநில தொழிலாளர்கள் மீட்பு




நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் பகுதிக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட 12 மலைவாழ் தொழிலாளர்கள் தோட்ட வேலை மற்றும் போர்வேல் வேலை போன்ற வேலைகளுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்களில் 6 பேர் தோட்ட வேலைக்கும் மீதமுள்ள 6 பேரை போர்வேல் வேலைக்கும் பணியமர்த்தப்பட்டனர்.

இவர்கள் கடந்த ஜனவரி மாதம் அழைத்து வரப்பட்டு இன்று வரை ஆறு மாதமாக இவர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை வாங்கியுள்ளனர்.

 மேலும் இவர்களின் ஆதார் அட்டையை பறிமுதல் செய்து கொண்டு மிரட்டி வேலை வாங்கி வந்தனர்.

இந்நிலையில் இவர்களில் ஒருவர்  தங்களை மாநில முதல்வர்க்கு தங்களை காப்பாற்றும்மாறு கடிதம் எழுதினார்.

இவரின் புகார் கடிதத்தை ஏற்ற ஜார்க்கண்ட் மாநில அரசு அதிகார்வ பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது.

இதன்படி இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு இன்று நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் பகுதியில் உள்ள கூலி தொழிலாளர்களை மீட்டனர்.

மீட்ட அவர்களை இன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் அவர்களுக்கு நிலுவையில் உள்ள தொகையை திருப்பி வழங்கும் பணியில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.



Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்