முக கவசம் இன்றி பயணிக்கும் நாமக்கல் மக்கள் -- கொரோணா பரவும் அபாயம்
கொரோனா எனும் கொடிய அரக்கனின் வீரியம் தெரியாமல் நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் பலர் முக கவசம் இன்றி தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று வரை இன்னும் 70 சதவீத மக்கள் கொரோனா நோயின் தாக்கத்தை சிறிதும் கூட கவலைப்படாமல் முகக்கவசம் இன்றி தற்போது வரை பயணித்து வருகின்றனர்.
அரசு தரப்பில் இருந்து பல்வேறு வழிமுறைகள் மற்றும் நெறிமுறைகள் வழங்கப்பட்டு வந்தாலும் மக்கள் அதனை கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்கில் செயல்படுவது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை ஊக்குவிக்கும் விதமாக மக்கள் தற்போது செயல்பட்டு வருகின்றனர்.
அதாவது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முக்கிய காரணியாக சமூக இடைவெளி முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுவது போன்றவை முக்கிய வழி முறைகளாக கொரோனாவை தடுப்பதற்கு தற்போது வரை பின்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயின் பாதிப்புகள் ஒன்று அல்லது இரண்டு இலக்கத்தில் தற்போது வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதனை கண்டு கொள்ளாமல் மக்கள் அலட்சியமாக திரிவதால் கொரோனா பரவும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு குழு மற்றும் முக கவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர் இந்நிலையில் மக்கள் தொடர்ந்து அலட்சியப் போக்கில் தற்போது செயல்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 85 நபர்கள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதில் 77 நபர்கள் குணமடைந்து வீடு சென்று உள்ளனர் இதில் மீதும் மீதமுள்ள ஏழு நபர்கள் தற்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் நாமக்கல் மாவட்டத்தில் கூறினார்கள் ஆனால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Comments
Post a Comment