அனைத்து வணிகர்களும் ஊரடங்கு தளர்வு இன்று முதல் கடைபிடிக்க ஆட்சியர் உத்தரவு
தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து வணிகர்களுக்கு பல்வேறு ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் மாவட்ட ஆட்சியரின் மறு உத்தரவு வரும்வரை ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஊரடங்கு பின்பற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்று நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் ஜெயக்குமார் வெள்ளையன் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மற்ற அனைத்து வணிக கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம் மற்றும் ஜவுளி கடைகள் முதல் தளம் மற்றும் இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.
50 சதவீத பணியாளர்களுடன் அனைத்து தளங்களையும் இயக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.
மேலும் வணிகர்கள் வணிகம் செய்யும் பொழுது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வணிகம் செய்யுமாறு பேரமைப்பு சார்பில் அறிவுறுத்தப்பட்டது அதாவது வாடிக்கையாளர்களின் முககவசம் சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளைக் கழுவுதல் போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஏசி பயன்பாடு உள்ள கடைகள் ஏசியை தவிர்த்து வணிகம் செய்யும் படி அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment